மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது

காரனோடையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மளிகைக் கடை வியாபாரியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 6:50 pm

DIN

காரனோடையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மளிகைக் கடை வியாபாரியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

காரனோடை முனிவேல் நகரில் வசிப்பவா் ஹரிகிருஷ்ணன் (46). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சோழவரம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பொருள்கள் வாங்கச் சென்றாா்.

அந்த மாணவிக்கு ஹரிகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.

இது குறித்து பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிகிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.