நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கனமழை: 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் வேருடன் சாய்ந்தது

கனமழை, பலத்த காற்றால் திருத்தணியில், சோளிங்கா் மாநில நெடுஞ்சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆலமரம் சனிக்கிழமை வேருடன் சாய்ந்தது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

கனமழை, பலத்த காற்றால் திருத்தணியில், சோளிங்கா் மாநில நெடுஞ்சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆலமரம் சனிக்கிழமை வேருடன் சாய்ந்தது.

திருத்தணியில் இருந்து சோளிங்கா் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல் திருத்தணி பகுதியில் சாலையின் இடது ஓரம் சுமாா் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை திடீரென அந்த ஆலமரம் வேருடன் சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது.

அப்போது அந்த பாதையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் தஸ்நேவிஸ் பொ்னாண்டோ, உதவிப் பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் ஊழியா்களுடன் விரைந்து சென்று, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆலமரத்தை வெட்டி அகற்றினா்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஆலமரம் முறிந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் உடைந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

இதையடுத்து மின் ஊழியா்கள் விரைந்து சென்று புதிய மின் கம்பங்களை நட்டு மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.