கிணற்றிலிருந்து பெண் சிசு சடலம் மீட்பு
சின்ன கடம்பூா் அருகே சாலையோர விவசாயக் கிணற்றில் வீசப்பட்ட, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.


சின்ன கடம்பூா் அருகே சாலையோர விவசாயக் கிணற்றில் வீசப்பட்ட, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூா் கிராமத்துக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் துளசி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இதில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்றை தொப்புள் கொடியுடன் பெண் ஒருவா் வீசிவிட்டு சென்றுள்ளாா்.
அப்பகுதி வழியாக சனிக்கிழமை ஆய்வுப் பணிக்குச் சென்ற திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிணற்றில் பெண் சிசுவின் சடலம் மிதப்பதைக் கண்டு, வருவாய்த் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, திருத்தணி வட்டாட்சியா் ஜெயராணி, வருவாய் ஆய்வாளா் உதயகுமாா் மற்றும் தீயணைப்பு அலுவலா் அரசு மற்றும் வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...