ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை

திருவள்ளூர் அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து சராமரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

News image
Updated On :18 மே 2021, 5:29 pm

DIN

திருவள்ளூர் அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து சராமரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே குமாரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தியின் மகன் காமேஷ் (33). இந்த நிலையில் இவர் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி தனது மின்கலம் பொறுத்திய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது புதிய இருளஞ்சேரி ஆலமரம் அருகே சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காமேஷை வழிமறித்து அரிவாளால் சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில், படுகாயம் அடைந்த காமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தோர் மப்பேடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸார் இரவில் காமேஷின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மப்பேடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து என்ன காரணத்திற்காக காமேஷை வெட்டி படுகொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பியோடினர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். எனவே இரவில் நடந்த இளைஞர் கொலைச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.