அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்வு

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.  இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாக

News image
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்வு
Updated On :4 நவம்பர் 2021, 10:48 am

DIN

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.  இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.

நேற்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 34 அடியாகவும் கொள்ளளவு 2817 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. தற்போது ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் திருவள்ளூர் மற்றும் பூண்டி சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து விநாடிக்கு 2000 கன அடியாக உள்ளது.

தற்போது பெய்துவரும் பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி கடந்த வாரம் திறந்து விடப்பட்ட உபரிநீர் 1000 கன அடியிலிருந்து உயர்த்தி நேற்று காலை 7 மணி அளவில் விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.