திருவள்ளூரில் ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளதால் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் ஏழு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த ஏரிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பூண்டி அருகே உள்ள ஊத்துக்கோட்டை அடுத்த ஒதப்பை கிராமம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.
இதன் காரணமாக ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் இந்த பாலமானது நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


