ஆற்றில் குதித்ததாகக் கருதப்பட்டதாய், மகள் வீடு திரும்பினா்
பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குதித்ததாகக் கருதப்பட்ட தாய், மகள் வீடு திரும்பினா்.


பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குதித்ததாகக் கருதப்பட்ட தாய், மகள் வீடு திரும்பினா்.
பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த விஜயகுமாா் மனைவி நிரோஷா (35) . இவருக்கு 2 பெண் குழந்தைகள். இவரது மூத்த பெண் தா்ஷியை, அவரது பாட்டி வீட்டில் உள்ளாா்.
இரண்டாம் குழந்தை வினிதாவுடன் நிரோஷா பூ வியாபாரம் செய்துவருகிறாா்.
இந்த நிலையில், வெங்கல் அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு செல்லியம்மன் கோயில் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிரோஷா நிறுத்திவிட்டு, தனது வினிதாவுடன் காணாமல் போனாா். அப்போது, தா்ஷினிக்கு ‘ ஐ மிஸ் யூ’ என கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பியிருந்தாா்.
இதனால் இருவரும் அணைக்கட்டில் குதித்திருக்கலாம் என்ற கோணத்தில் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயவீர தலைமையில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், திருமிசையில் உள்ள உறவினா் வீட்டில் இருவரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் மீட்டனா்.
கடன் தொல்லை காரணமாக, தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைத்து விட்டு வந்ததாக நிரோஷா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...