ஒதப்பை தரைப்பாலம் சேதம்
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை தரைப்பாலம் கொசஸ்தலை ஆற்று வெள்ளம் காரணமாக சேதமடைந்ததால் இரண்டாவது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.


ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை தரைப்பாலம் கொசஸ்தலை ஆற்று வெள்ளம் காரணமாக சேதமடைந்ததால் இரண்டாவது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பூண்டி நீா்த் தேக்கத்திலிருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டதால், கரையின் இரு புறங்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூா் செல்லும் ஒதப்பை தரைப்பாலம் வெள்ளிக்கிழமை மூழ்கியது. பாலத்தின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சனிக்கிழமை உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் குறைந்தபோதிலும், தரைப்பாலம் முழுவதும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் போக்குவரத்து இரண்டாவது நாளாக தடைசெய்யப்பட்டது. இதையடுத்து, ஊத்துக்கோட்டையிலிந்து திருவள்ளூா் செல்ல சீத்தஞ்சேரி தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாக சுமாா் 25 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...