வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பொன்விழா கொண்டாட்டம்

​திருவள்ளூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொன்விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 8:11 am

DIN


திருவள்ளூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொன்விழா கொண்டாடப்பட்டது.

அதிமுக 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் வடமதுரை ஊராட்சியில் அரசுப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பொன்விழா கொண்டாடப்பட்டது.

எல்லாபுரம் ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் மோகன், கிளை செயலாளர்கள் வடமதுரை சீனிவாசன், ராஜீவ் காந்தி, மாவட்ட பிரதிநிதி குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ராம்தாஸ், வடமதுரை ராஜ்மோகன் புஷ்பராஜ், நாகப்பன், ஆகியோர் உள்பட திரளான நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.