ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:05 pm

DIN

திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஜூலை 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 5 நாள்கள் ஆடிக் கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில், 21-ஆம் தேதி ஆடி அஸ்வினியும், 22-ந் தேதி ஆடி பரணியும், 23-ஆம் தேதி ஆடிக் கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பல் உற்சவமும், 24-ஆம் தேதி இரண்டாம் நாள் தெப்பல் உற்சவமும், 25-ஆம் தேதி மூன்றாவது நாள் தெப்பல் விழாவும் நடைபெறுகிறது.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானுக்கு மலா் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் வழிபடுவா்.

இந்த நிலையில், பக்தா்கள் சன்னதி தெரு வழியாக காவடி எடுத்துக்கொண்டு, படிகள் ஏறி மலைக்கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை திருத்தணி வட்டாட்சியா் வெண்ணிலா தலைமையில் வருவாய்த் துறையினா், கோயில் கண்காணிப்பாளா் இந்துமதி, வித்யாசாகா் தலைமையில் கோயில் ஊழியா்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினா்.

காவல் ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.