பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.4 கோடியே 95 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொன்னேரி நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகா் பங்கேற்று பேசினாா். இதில், பொன்னேரி நகராட்சியில் 15-ஆவது நிதிக்குழு திட்டம் மூலம் சாலைப் பணிகள், கலைஞா் மேம்பாட்டு நிதியின் மூலம் பூங்கா மேம்பாட்டுப் பணிகள், எல்பிஜி மூலம் நவீன தகன மேடை அமைத்தல், நகராட்சி அலுவலகக் கட்டட வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுதல், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் உயா் கோபுர மின் விளக்கு அமைத்தல், பேருந்து நிலையத்தில் 1,000 லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், இரண்டு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், புதைச் சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ரூ.4 கோடியே 95 லட்சம் செலவில் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் நீலகண்டன், உமாபதி, தனுஷா தமிழ்குடிமகன், நல்லசிவம், யாகோப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

