புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவள்ளூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்

திருவள்ளூர் அருகே அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்

News image

திருவள்ளூர் அருகே அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு திங்கள்கிழமை காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்.

Updated On :18 ஜூலை 2022, 7:23 am

DIN

திருவள்ளூர் அருகே அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் இருந்து அரசு மாநகரப் பேருந்து திங்கள்கிழமை காலை திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் துரை ஓட்டி வந்தாராம். அதில் நடத்துநராக செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன்(50) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாநகரப் பேருந்து திருவள்ளூர் அருகே அரண்வாயல்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் நிறுத்தவில்லையாம். இதையடுத்து ஆத்திரமடைந்த அங்கிருந்த மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் துரையை தரக்குறைவாக பேசியதோடு தாக்கியும் விட்டு தப்பி ஓடினார்களாம்.

 இதைத் தொடர்ந்து ஓட்டுநர் துரை அங்கேயே பேருந்தை நிறுத்தி விட்டு நடத்துநருடன் இறங்கினார். இதேபோல் அவருக்கு ஆதரவாக திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லியில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, ஓட்டுநர் துரை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், உடனே தப்பியோடிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் பேருந்து பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும், சாலையில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் 2 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாபேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர்.  அதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய போராட்டத்தை கைவிட்டு விட்டு மாநகர பேருந்துகளில் பணிகளுக்கு திரும்பினர். இப்போராட்டத்தில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.