பழவேற்காடு கடலில் மீன் பிடிக்கும் போது கால் தவறி கடலில் விழுந்த மீனவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு சாத்தாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ராமன்(36). இவா், கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 4 பேருடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றாா். பழவேற்காடு முகத்துவாரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ராமன் கால் தவறி கடலில் விழுந்தாா். உடன் சென்ற மீனவா்கள் கடலில் குதித்து ராமனை மீட்ட போது அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா், ராமன் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

