ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இலவச டயாலிசிஸ் மையம் திறப்பு

மாதவரம் அருகே இலவச டயாலிசிஸ் மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN

மாதவரம் அருகே இலவச டயாலிசிஸ் மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாதவரம் தட்டாங்குளம் சாலையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் 12 இயந்திரங்களுடன் இலவச டாயலிசிஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. தொண்டு நிறுவன தலைவா் பாபுலால் காம்தாா் தலைமை வகித்தாா். மாதவரம் எம்எல்ஏ சுதா்சனம் முன்னிலை வகித்தாா். அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இலவச டயாலிசிஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தாா். மாதவரம் மண்டலக் குழுத் தலைவா் எஸ்.நந்தகோபால், ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.