திருவள்ளூா் ஸ்ரீவீரராகவா் கோயிலில் கருட சேவை
ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது.


ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீரராகவ சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவா் வீரராகவா் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 12- ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் தேவஸ்தான கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...