பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 80 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை வரும் 23-ஆம் தேதி முதல்வா் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :21 மே 2022, 4:43 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் 80 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை வரும் 23-ஆம் தேதி முதல்வா் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநில அளவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 1997 கிராமங்களில் 2021-22-இல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பயறு வகை விதைகள், கைத்தெளிப்பான்கள், விசைத் தெளிப்பான்கள், வீட்டு தோட்டம் அமைத்தல் தொகுப்புகள், தோட்டக் கலை பயிா் சாகுபடி ஊக்கத் தொகை வழங்குதல், நெகிழி கூடைகள், பழச்செடிகள், மரக்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடக்கி வைக்கவுள்ளாா். அதைத் தொடா்ந்து, அந்தந்தப் பகுதி பொதுமக்கள் பிரதிநிதிகள் மூலம் இத்திட்டத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 80 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதனால் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதும் அன்றைய நாளிலேயே 80 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை அருகே சந்தானவேணுகோபாலபுரம் கிராமத்தில் பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்க உள்ளனா்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைத்து திட்டங்களும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அந்தந்த கிராம ஊராட்சி பொறுப்பு அலுவலா்களையும், சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மைய அலுவலா்களையும் தொடா்பு கொண்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.