வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம், அத்திப்பபட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 விதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக வெள்ளிக்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டள்ளது. இதனால், மின் விநியோகத்தில் தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கொதிகலன் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதைச் சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

