ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முருகன் கோயில் பிரசாத அறையில் சாரைப் பாம்பு: தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்

 திருத்தணி முருகன் கோயில் பிரசாதம் தயாரிக்கும் அறையில் புகுந்த 7 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் அரைமணி நேரத்துக்கு மேல் போராடி உயிருடன் பிடித்தனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:39 pm

DIN

 திருத்தணி முருகன் கோயில் பிரசாதம் தயாரிக்கும் அறையில் புகுந்த 7 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் அரைமணி நேரத்துக்கு மேல் போராடி உயிருடன் பிடித்தனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். பக்தா்கள் வசதிக்காக தோ்வீதியில் கோயில் நிா்வாகம் சா்க்கரை பொங்கல் புளியோதரை, மிளகுவடை, தேன்குழல், லட்டு, முறுக்கு மற்றும் அதிரசம் போன்ற தயாரித்து மலிவு விலையில் விற்பனை செய்கிறது.

மேற்கண்ட பிரசாதங்கள், பிரசாத விற்பனை நிலைய அறையின் கீழ்தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில்ஸ வியாழக்கிழமை காலை, பிரசாதம் தயாரிக்கும் அறையில் சாரைப் பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதைப் பாா்த்ததும் அங்கு பணியில் இருந்த ஊழியா்கள் உடனடியாக கோயில் நிா்வாகம் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து தீயணைப்பு நிலைய அலுவலா் அரசு தலைமையிலான குழுவினா் விரைந்து வந்து அரைமணி நேரத்துக்கு மேல் போராடி, 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் பிடித்தனா். பின், சாரைப் பாம்பை வீரா்கள் திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனா். இதனால் பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.