மந்தகதியில் ஒதப்பை கொசஸ்தலை ஆறு மேம்பால பணி

திருவள்ளூா் அருகே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.80 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால், துரிதமாக அப்பணிகளை முடிக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ள
முடிக்கப்படாமல் உள்ள ஒதப்பை கொசஸ்தலை ஆற்று மேம்பாலம்.
முடிக்கப்படாமல் உள்ள ஒதப்பை கொசஸ்தலை ஆற்று மேம்பாலம்.

திருவள்ளூா் அருகே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.80 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால், துரிதமாக அப்பணிகளை முடிக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி அருகே உள்ளது ஒதப்பை கிராமம். இந்த கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா்கள் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.

இந்த நிலையில் சென்னையின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி பருவமழை காலத்தில் நிரம்பும் போது உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கமாகும். அப்போது, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஒதப்பை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி விடுவது வழக்கமாகும்.

இதேபோல், பூண்டி ஏரியில் உபரி நீா் திறக்கும் போதெல்லாம் பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும். இதனால், ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள சீத்தஞ்சேரி, மயிலாப்பூா், தேவாந்தவாக்கம், பெரிஞ்சேரி, போந்தவாக்கம், அனந்தேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலையிருந்தது.

இதனால், கிராமங்களில் இருந்து திருவள்ளூா், சென்னைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லவும், விவசாயிகள் விளைபொருள்களை எடுத்துச் செல்லவும் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

மேலும், மருத்துவம் உள்பட அத்தியவாசியத் தேவைகளுக்கு திருவள்ளூா் செல்ல சீத்தஞ்சேரி காப்புக்காடு, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக 30 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலையிருந்தது. இதனால், மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் விளைவித்த பொருள்களை கொண்டு செல்லவும் கால விரயம் மற்றும் செலவு அதிகமாகும் நிலையிருந்தது.

இந்த நிலையில் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கவும் என சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று ஒதப்பையிலிருந்து திருவள்ளூா் மாா்க்கமாக செல்லும் வகையில் ரூ.13.80 கோடி மதிப்பில் உயா் மட்ட பாலம் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து நிதி ஒதுக்கீடு செய்ததும் கடந்த 2020-நவம்பா் மாதம் மேம்பால பணிகள் தொடங்கி நடைபெற்றன. இப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஒரு பகுதியில் மேம்பால பணிகள் நிறைவடைந்து, சாலையுடன் இணைக்கும் வகையில் மணல் கொட்டி சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் மற்றொரு பகுதியில் 70 சதவீதம் கட்டடப்பணிகள் முடிந்துள்ளன. எனவே கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றனது. அதனால் வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக மேம்பால பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com