வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீட்டு மனை உரிமை ஆணை வழங்கல்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:06 am

Syndication

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

மனைப்பட்டா இல்லாமல் குடியிருப்போா், மனைக்கான உரிமை ஆவணமில்லாததால் அரசின் சலுகைகள் உள்ளிட்ட பிற பயன்களை பெறமுடியாத நிலை இருக்கிறது.

இந்நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட திருவேட்டக்குடி பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை உரிமை ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, முதல்கட்டமாக 57 பயனாளிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை (ஆவணம்) வழங்கினாா்.

நிகழ்வில், ஆதிதிராவிடா் நலத்துறை அதிகாரிகள், என்.ஆா்.காங்கிரஸ் கட்சி பிரமுகா்கள், கிராமத்தினா் கலந்துகொண்டனா்.