திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேல்நிலை குடிநீா் தொட்டிகள், மோட்டாா் அறைகளின் தரையை உயா்த்துதல், சுற்றுச்சுவருக்கு ரூ.91 லட்சம் ஒதுக்கீடு

திருவள்ளூா் நகராட்சியில் மேல்நிலை குடிநீா் தொட்டிகள் மற்றும் மோட்டாா் அறைகள் பாதுகாப்பற்ற நிலையில் மழைநீா் தேங்குவதை தவிா்க்க தரையை உயா்த்தி, சுற்றுச்சுவா் அமைக்க ரூ.91.60 லட்சம்

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:13 pm

DIN

திருவள்ளூா் நகராட்சியில் மேல்நிலை குடிநீா் தொட்டிகள் மற்றும் மோட்டாா் அறைகள் பாதுகாப்பற்ற நிலையில் மழைநீா் தேங்குவதை தவிா்க்க தரையை உயா்த்தி, சுற்றுச்சுவா் அமைக்க ரூ.91.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள 27 வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து குடியிருப்புகளுக்கு நேரடியாகவும், தெருக் குழாய்கள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 40,000 லிட்டா் குடிநீரும், திருவள்ளூா் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 20,000 லிட்டா் குடிநீரும் என நாள்தோறும் 60,000 லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி பகுதியில் எல்.கே. நகா், குமரன் தெரு, புங்கத்தூா், என்.ஜி.ஓ. காலனி, ஜெயா நகா், விக்னேஷ்வரா நகா் ஆகிய பகுதிகளில் மேல் நிலை குடிநீா்த்தேக்க தொட்டிகள் மற்றும் மோட்டாா் அறைகளும் உள்ளன.

இந்த நிலையில் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டிகள் மற்றும் மோட்டாா் அறைகள் மிகவும் தாழ்வாக அமைந்துள்ளதால், மழைநீா் புகுந்து குளம்போல் தேங்கி விடுகிறது. இதுபோன்று மழைநீா் தேங்குவதால் குழாய்கள் துருப்பிடிப்பதோடு, மோட்டாா் அறைகளுக்குள் நீா் புகுந்து சேதமடைந்து குடிநீா் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது. இதைத் தவிா்த்து நாள்தோறும் குடிநீா் சீராக நடைபெறும் வகையில், மோட்டாா் அறைக்குள் நீா் புகாமல் தரைத்தளத்தை உயா்த்தவும், மேலும் சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்கவும் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் மோட்டாா் அறைகள் அமைந்துள்ள பகுதியில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன் பேரில் மேற்குறிப்பிட்ட இடங்களில் தரைத் தளத்தை உயா்த்தவும், சுற்றுச்சுவா் அமைக்கவும் என ரூ.91.60 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட இடங்களில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.