தமிழ்நாட்டிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உறவு தொப்புள் கொடி உறவைப் போன்றது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 11) கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:
''இது தமிழ்நாட்டிற்கும் தில்லிக்கும் இடையிலான தேர்தல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லா மேடைகளிலும் கூறிக்கொண்டு இருக்கிறார்.
தில்லியில் இருந்து ஆட்சி செய்தாலும், பிரதமர் மோடி குஜராத்தைச் சேர்ந்தவர். குஜராத்துக்கும் தமிழ்நாட்டிற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு உள்ளது.
சங்க காலத்திற்கு முன்பு குஜராத்தில் திராவிடர் ஆட்சி நடைபெற்றது. அதில் துவாரகா என்ற பகுதியில் ஆட்சி செய்தவர்கள். அந்தப் பகுதியில் இருந்து பிரதமர் மோடி வந்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு, தொப்புள் கொடி உறவைப் போன்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே. வாசன் என அனைவரும் பிரதமருக்கு துணையாகக் கூடியிருக்கிறோம்.
தமிழக மக்களை ஏமாற்றுகிற திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் அம்மா ஆட்சியை, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' எனப் பேசினார்.
அன்புமணி - படம் - யூடியூப் / நரேந்திர மோடி
திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?
கூட்டத்தில், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? எனக் குறிப்பிட்டு அன்புமணி பேசியதாவது:
''கடந்த 5 ஆண்டு காலத்தில் 8752 கொலைகள் நடந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக கொலைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு. 1977 பெண்களும், 367 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு.
திமுக அரசு மதுபானங்களை விற்கவில்லை, மதுவை திணித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே மதுவால் அதிக விபத்துகள் ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.
பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2200 பாலியல் குற்றங்கள். மதுராந்தகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியுள்ளது ஒரு மனித மிருகம்.
4 வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை ஒரு மிருகம் பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்துள்ளது. அவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர் எனக் கூறுகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி சம்பவம், அண்ணா பல்கலைக் கழக சம்பவம் என ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள். இவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். இத்தகைய ஆட்சியை அகற்ற வேண்டும் என, மூன்று மகள்களின் தந்தையாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது.
மத்தியிலும் நமது ஆட்சி, மாநிலத்திலும் நமது ஆட்சி இருக்க வேண்டும். ஒரு விவசாயியை முதல்வராகக் கொண்டுவர வேண்டும். இரண்டு மாதங்களில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.
Summary
Tamil Nadu and Modi have an umbilical cord relationship: TTV Dhinakaran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி: டிடிவி. தினகரன்

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை



