சொத்துத் தகராறு: கன்னிகைப்பேர் கிராமத்தில் அண்ணன் மனைவி அடித்துக் கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த கன்னிகைப்பேரில் சொத்துத் தகராறில் சொந்த அண்ணன் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 
சொத்துத் தகராறு: கன்னிகைப்பேர் கிராமத்தில் அண்ணன் மனைவி அடித்துக் கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த கன்னிகைப்பேரில் சொத்துத் தகராறில் சொந்த அண்ணன் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம்,மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் திராவிடபாலு. இவர் திமுக ஒன்றிய கழகச் செயலாளராகவும், கன்னிகைப்பேர் ஊராட்சிமன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், திராவிடபாலுவின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், திராவிடபாலு குடும்பத்தினருக்கும், சத்தியவேலு குடும்பத்தினருக்கும் இடையே நிலம் பாகப்பிரிவினை செய்து கொள்ளுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இது சம்பந்தமாக இரண்டு குடும்பங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், திராவிட பாலுவின் மனைவி செல்வி பாலு(வயது55), மகன் முருகன் (வயது42), மருமகள் ரம்யா(வயது32), முருகனின் மகன் கருணாநிதி(வயது15) ஆகியோருக்கும் சத்திய வேலுவின் மகன் பவுன்குமார் என்ற விஷால்(வயது22) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

பின்னர், பிரச்னை அடித்தடியாக மாறியது. அப்போது அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து விஷால் தனது பெரியம்மா செல்வி பாலு, பெரியப்பாவின் மகன் முருகன், மருமகள் ரம்யா, பேரன் கருணாநிதி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கினாராம். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் நான்கு பேரும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி ரம்யா பலியானார். மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இப்ப பிரச்னையால் கன்னிகைப்பேர் கிராமத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், சொத்துப் பிரச்னையால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது? காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com