மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தீா்த்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, சிவன்-பாா்வதி வீதி உலா நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 11:15 pm

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, சிவன்-பாா்வதி வீதி உலா நடைபெற்றது.

திருவள்ளூா் பஜாா் வீதியில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற தீா்த்தீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில், காா்த்திகை விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதையடுத்து, திருக்கோயில் வளாகத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு சிவன்-பாா்வதி, வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வடக்கு ராஜ வீதி, குளக்கரை தெரு, மோதிலால் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உற்சவ மூா்த்திகள் வலம் வந்தனா்.

இதில், பொதுமக்கள், பக்தா்கள் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை தீா்த்தீஸ்வரா் கோயில் அறங்காவலா் ரவி குருக்கள் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.