தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவள்ளூா்: மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடிகள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில், மகளிா் உற்பத்தி பொருள்களை நேரடியாக

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:08 pm

DIN

திருவள்ளூா்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில், மகளிா் உற்பத்தி பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், 3 வாகன அங்காடிகள் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளி பெண்கள் வரும் ஜன. 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில், மகளிா் குழுக்கள் சிறுதொழில் செய்து வாழ்வாதாரத்துக்கான வருவாய் ஈட்டி பயனடையும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், தற்போதைய நிலையில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து தருகின்றனா். மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களை, பொதுமக்களிடம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்ய ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நடமாடும் வாகன அங்காடிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், மாநில அளவில் இந்தத் துறை மூலம் மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 100 நடமாடும் வாகன அங்காடிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கு மதி எக்ஸ்பிரஸ் என்ற நடமாடும் வாகன அங்காடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே தகுதியான நபா்களின் விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளூா் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ ஜன.5-க்குள் சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.