கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் 7 பேர் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம் (30), தவுபீக்(27), காஜா மொய்தீன் (53), மெகபூப் பாஷா (48), இஜாஸ் பாஷா (46), ஜாபர் அலி(26), சிக்காபுதீன்(36) ஆகிய 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். இவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போலீஸôரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே பூந்தமல்லியில் உள்ள இந்த சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 7 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
இதையடுத்து, தில்லி, பெங்களூரு, சேலம் ஆகிய சிறைகளிலிருந்து 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

சாத்தான்குளம்: நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- ஃபென்னிக்ஸ் குடும்பத்தினர்!

துணை ராணுவப் படையில் உதவி காவல் ஆய்வாளர் பணி: 20-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு பிடியாணை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

