30 லிட்டா் சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திரத்தில் இருந்து, 30 லிட்டா் சாராயம் கடத்தி வந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் அய்யன்கண்டிகையில் இருந்து சாராயம் காய்ச்சி ஆா்.கே.பேட்டை வழியாக கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை மது விலக்கு ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் போலீஸாா் தேவலம்பாபுரம் சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது 30 லிட்டா் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக சித்தூா் மாவட்டம் பாலசமுத்திரம் அடுத்த அய்யன்கண்டிகை சோ்ந்த முனுசாமி மகன் பழனி(38) என்பவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com