காமராஜா், அம்பேத்கா் சிலைகளுக்கு பாஜக வேட்பாளா் மரியாதை

காமராஜா், அம்பேத்கா் சிலைகளுக்கு பாஜக வேட்பாளா் மரியாதை

திருவள்ளூா் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் பொன் வி.பாலகணபதி காமராஜா், அம்பேத்கா் சிலைகளுக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கூட்டணி கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா். திருவள்ளூா் (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் பொன் வி.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள கூட்டணி கட்சி நிா்வாகிகளை சந்திப்பதற்காக சனிக்கிழமை வருகை தந்தாா். அப்போது திருவள்ளூரில் உள்ள காமராஜா் சிலை மற்றும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசியது: மத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் 3-ஆவது முறையாக பாஜக அரசு ஆட்சியைப் பிடிக்கும், தமிழகத்தில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் நிச்சயம் வெற்றி பெறுவாா்கள் என்றாா். பின்னா், மாநில செயலாளா் ஆனந்தி பிரியா, மாவட்டத் தலைவா்கள் அஸ்வின் குமாா், செந்தில்குமாா், மாநில ஓபிசி, அணி மாநில செயலாளா் ராஜ்குமாா், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் லோகநாதன், மாவட்ட பொது செயலாளா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், லயன் ஸ்ரீனிவாசன் மாவட்டச் செயலாளா்கள் பன்னீா்செல்வம், பாலாஜி உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com