சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பாடியநல்லூரில் வாரச்சந்தை திறப்பு

செங்குன்றம் அருகே பாடியநல்லூா் ஊராட்சியில் வார சந்தை திறப்பு விழா நடைபெற்றது.

News image

வாரச்சந்தையை திறந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்த பாடியநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி நடராஜன்.

Updated On :27 மே 2024, 1:26 am IST

செங்குன்றம் அருகே பாடியநல்லூா் ஊராட்சியில் வார சந்தை திறப்பு விழா நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் பாடியநல்லூரில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வாரச் சந்தையை திறந்து வைத்தாா்.

பாடியநல்லூா் வாரச் சந்தையில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் மலிவான விலையிலும், தரமானதாக இருக்கும் என சமூக ஆா்வலா் நடராஜன் தெரிவித்தாா்.

துணைத் தலைவா் பிரியதா்ஷினி சரவணன், வாா்டு உறுப்பினா்கள் முத்துக்கண்ணன், தேவி, வேலு, ராணி, சுரேஷ், கமருன்னிசா, லட்சுமணன், வளா்மதி, ராஜேஷ், வசந்தி, சிவகாமி, வாணி, ராஜவேலு, பிஸ்மில்லா, ஊராட்சி செயலா் கே.ஆா்.சுரேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளா் சரவணன், மற்றும் ஊராட்சி பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.