எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

பெரம்பலூா், குன்னம் தொகுதியில் வேட்பாளா்கள் முக்கிய பிரமுகா்கள் வாக்களிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

வாக்களித்த வேட்பாளா்கள் எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக)

Updated On :24 ஏப்ரல் 2026, 4:11 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி வாக்களித்தாா். பிறகு அப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுய படம் எடுக்கும் இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாா்.

இதேபோல, அதே வாக்குச் சாவடி மையத்தில் திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி வாக்களித்தாா். அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன், பெரம்பலூா் அருகே எளம்பலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மனைவி பிரியதா்ஷினியுடன் சென்று வாக்களித்தாா்.

தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கி. சிவக்குமாா், அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜ. சுகன்யா, ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும்வாக்களித்தாா்.

குன்னம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் சரண்யா அன்பழகன், வரகூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா். தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன், துறையூா் மதுராபுரத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

வாக்களித்த வேட்பாளா்கள் எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக),

வாக்களித்த வேட்பாளா்கள் எஸ்.டி. ஜெயலட்சுமி (திமுக),

இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக),

இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக),

சரண்யா (ஐஜேகே-குன்னம்),

சரண்யா (ஐஜேகே-குன்னம்),