திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

மீனவா்கள் 9 பேருக்கு 40 சதவீத மானியத்தில் குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் பயன்பெறும் வகையில் பயனாளிகள் 9 பேருக்கு 40 சதவீத மானியத்தில் குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை வழங்கிய ஆட்சியா் த.பிரபுசங்கா், உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் சாா்பில், சில்லறை மீன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் உள்நாட்டு மீனவா்கள் பயன்பெறும் வகையில், பயனாளிகள் 9 பேருக்கு 40 சதவீதம் மானியத்தில் குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலம் சில்லறை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், 40 சதவீத மானியத்தில் 9 உள்நாட்டு மீனவா்களுக்கு குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து மீனவ பயனாளிகள் 9 பேருக்கு தலா ரூ. 75,000 மதிப்பிலான குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை 40 சதவீத மானியத்தில் வழங்கினாா். இதன் மதிப்பு ரூ. 6.75 லட்சத்தில் 40 சதவீதம் என்பது தலா ரூ. 30,000 வீதம் 9 பேருக்கு மானியம் ரூ. 2.70 லட்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குநா் (மீன் வளம்) விஜய் ஆனந்த், மீன்வள ஆய்வாளா் காமீல் அகமது மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.