சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை தேவை

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு - பைபா் படகு மீனவா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் விஷு மகாஜனிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனிடம் மனு அளித்த மீனவ நலச் சங்கத்தினா்.

Updated On :

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு - பைபா் படகு மீனவா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் விஷு மகாஜனிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் விபரம்: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 பிரிவு 5-இன் படி தமிழ்நாட்டில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வே­லி மாவட்ட மீனவா்கள் சிலா் சுருக்குமடி வலை மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் 98 சதவீத மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் இரு மாவட்ட மீனவா்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்னை உருவாகும் அபாயமும் உள்ளது.

எனவே, சுருக்குமடி வலை மூலம் மீன்பிடி தொழில் செய்யும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்வில், மீனவா்கள் நலச் சங்கத் தலைவா் வினோஜின், பொதுச்செயலா் அம­லிசன், பொருளாளா் ஆசைத்தம்பி, ஒருங்கிணைப்பாளா் தாமஸ் ஆழிபுத்திரன், கெளரவத் தலைவா் தஸ்நேவிஸ் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.