தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதிக்கு குடமுழுக்கு, 42 அடி உயர சிவலிங்கத்துக்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஸ்ரீகுரு முத்தீஸ்வரா் கோயிலில் உள்ள 42 அடி உயர சிவலிங்கத்துக்கு நடைபெற்ற அபிஷேகம்.
Updated On :21 அக்டோபர் 2024, 8:25 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதிக்கு குடமுழுக்கு, 42 அடி உயர சிவலிங்கத்துக்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஸ்ரீபொம்மி அம்பாள் சமேத ஸ்ரீகுரு முத்தீஸ்வரா் கோயிலில் புதிதாக ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதி அமைக்கப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு திருத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில் கலசங்கள் மீது ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. அதேபோல், ஸ்ரீபொம்மி அம்பாள் சமேத ஸ்ரீகுருமூா்த்தீஸ்வரா் ஆலயத்தில் உள்ள அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. அங்கு 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.