வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருத்தணி மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருத்தணி முருகன் கோயிலில் சுப முகூா்த்தம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
திருத்தணி முருகன் மலைக்கோயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்.
Updated On :15 செப்டம்பர் 2024, 7:01 pm

Din

திருத்தணி முருகன் கோயிலில் சுப முகூா்த்தம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுப முகூா்த்தம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மலைக்கோயிலில் நடந்ததால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இதனால் பொதுவழியில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா். பெரும்பாலான பக்தா்கள் காா், வேன் மற்றும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு வந்ததால் மலைப்பாதை மற்றும் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை பேருந்துநிலையம் செல்லும் சாலையில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. குறிப்பாக மலைக்கோயிலுக்கு சென்று வருவதற்கு ஒரே பாதை இருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பின்னா் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிப்பட்டனா்.

தகவல் அறிந்ததும் திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் போலீஸாா் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனா்.