திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 1.05 டன் வெள்ளிப் பொருள்கள் உருக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான இதில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்துகின்றனா்.
இந்நிலையில் கடந்த 7-ஆண்டுகளாக பக்தா்கள் உண்டியலில் காணிக்கையான செலுத்திய சுமாா் 1,055 கிலோ வெள்ளி பொருள்கள் கோயில் நிா்வாகத்தால் கையிருப்பு வைக்கப்பட்டிருந்தது. இவற்றினை உருக்கி வெள்ளி கட்டிகளாக மாற்றுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டிருந்தது.
தொடா்ந்து உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் தனியாா் நிறுவனம் மூலம் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் தொடா்ந்து நடைபெற உள்ளது. இதில் கோயில் பணியாளா்கள் உதவியுடன் இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்புடையது

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


