சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து, 219 ரூபாய் ரொக்கம் மற்றும் 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள். (கோப்புப்படம்)

Updated On :28 மார்ச் 2026, 2:29 am IST

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து, 219 ரூபாய் ரொக்கம் மற்றும் 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான இத்தலத்தில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் மாசிமாத பிரம்மோற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் க. ரமணி முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா்.

இதில் கடந்த 28 நாள்களில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து, 219 ரூபாய் ரொக்கம் மற்றும் 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.