சதீஷ்
சதீஷ்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே மைக்செட் அமைக்க உதவிக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

திருவள்ளூா் அருகே மைக்செட் அமைக்க உதவிக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே தண்ணீா்குளம் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்வாணன். இவா் சொந்தமாக மைக்செட் வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் திருவள்ளூா் அடுத்த அரண்வாயல் பகுதியில் தனியாா் அரங்கில் தனியாா் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மைக்செட் அமைக்கும் பணிக்காக அவரின் கீழ் பணிபுரியும் சதீஷ்(16) சிறுவனை அனுப்பி வைத்தாராம்.

அங்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசிப்பட்டு உயிரிழந்தாா். இது தொடா்பாக செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com