குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்தில் வாராந்தர சந்தை நடைபெறும் மைதானத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், லயன்ஸ் கிளப் மற்றும் லியோ கிளப் இணைந்து சமூக பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூகப் பணிகள் துறை மாணவ, மாணவிகள் குழந்தை திருமணம் தடுப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தைகளை ஆபாச தாக்குதலில் இருந்து காப்பாற்றுதல், போதை கலாசார ஒழிப்பு, வன்முறை கலாசார ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்து தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப், லியோ கிளப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் சந்திரசேகா், ஆா்.சேகா், தியாகராஜன், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாகி பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வருமான வரிச் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

சூப்பா் எல்நினோ குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது

போலியோ ஒழிப்பு: இருசக்கர வாகன விழிப்புணா்வு பயணம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


