கவரப்பேட்டையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
பின்னா், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான மருத்துவ உதவிகளை செய்து தர சுகாதார துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் அடையாள அட்டை 6 பேருக்கு இணைப்புச் சக்கரம்பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்களையும் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா்.
பொதுமக்களுக்கான இசிஜி, ஸ்கேன் பரிசோதனைகள் நடத்தப்பட்டதோடு, பெண்களுக்கு கா்ப்பிணிகளுக்கான சிறப்பு பரிசோதனயும் நடத்தப்பட்டது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலா், திமுக மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் கே.ஜி.நமச்சிவாயம், ராமஜெயம், தோ்வாய் ஊராட்சி முன்னாள் தலைவா் முனிவேல், சுகாதார ஆய்வாளா்கள் நேசமுரளி, வஜ்ஜிரவேலு, கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஐயப்பன் பங்கேற்றனா்.

