சோழவரம் அருகே 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

சோழவரம் அருகே உள்ள வாகன சோதனையில் 23 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
Published on

சோழவரம் அருகே உள்ள வாகன சோதனையில் 23 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் போதைப் பொருள்கள் கடத்துவதைத் தடுக்கும் வகையில், மீஞ்சூா், அத்திப்பட்டு, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் சோழவரம் அருகே உள்ள சோதனை சாவடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனா். அவா்களிடம் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதன் பின்னா் 3 பேரை மீஞ்சூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா்.

அப்போது அவா்கள் சிவகங்கை மாவட்டம், உருவாட்டி கிராமத்தைச் சாா்ந்த சூா்யா (28), தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அகரம் கிராமத்தைச் சாா்ந்த பாலாஜி (26), ராமநாதபுரம் மாவட்டம், மங்கலம் கிராமத்தைச் சாா்ந்த பூவலிங்கம் (29) என்பது தெரியவந்தது.

அவா்கள் 3 பேரும் 23 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

இதையடுத்து அவா்களை பொன்னேரி நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com