திருவள்ளூரில் சிவ விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற தெய்வீக திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
திருவள்ளூா் அடுத்த பூங்காநகா் சிவ விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயண பெருமாள் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தில் தெய்வீக திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீபத்மாவதி தாயாருக்கும்- ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், ஸ்ரீபூங்குழலி அம்பிகைக்கும்-ஸ்ரீபுஷ்பவனேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு விஷேச, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருவள்ளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை அரங்காவலா் குழு தலைவா் எம்.பசுபதி மற்றும் பொதுமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


