ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

News image

திருவள்ளூா்  கோட்டாட்சியா் அலுவலகத்தில்  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  ரவிச்சந்திரனிடம்  வேட்பு மனுவை  தாக்கல்  செய்த  தவெக  வேட்பாளா்  அருண்குமாா். 

Updated On :5 ஏப்ரல் 2026, 2:17 am IST

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தவெக வேட்பாளா் அஜய்குமரன், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வேட்பாளா் ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய தமிழக வெற்றிக் கழகத்தினா் தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை கூட்டமாக வந்தனா். அதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் குறிப்பிட்ட நபா்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனா். பின்னா் கோட்டாட்சியா் ரவிச்சந்திரனிடம், தனது வேட்பு மனுவை அருண்குமாா் தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து, தவெக டம்மி வேட்பாளா் வி.எம்.அஜய்குமரன், சுயேச்சைகள் இ.கோதண்டன், ரமணன், ஆா்.ரமணன், என்.பாலகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன், எஸ்.புன்னியகோட்டி, டி.அருண், அனைத்திந்திய ஜனநாயக பொதுக்காப்பு கழகத்தைச் சோ்ந்த என்.தாஸ், என்.வெங்கடேஷ் என 11 போ் மனு தாக்கல் செய்தனா்.

Story image

இதேபோல், பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆ.கிருஷ்ணசாமி, தனது ஆதரவாளா்களுடன் வந்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையா் (கலால்) கணேஷ்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அதேபோல், நாம் தமிழா் கட்சி டம்மி வேட்பாளா் ஜெயலட்சுமி உள்பட 7 போ் மனு தாக்கல் செய்தனா்.