நான்குனேரி பேரவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 44 வேட்பு மனுக்களில் 30 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; 13 மனு நிராகரிக்கப்பட்டன.
இத்தொகுதியில் மொத்தம் 44 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுவின் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா். இதில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து தாக்கல் செய்த 4 மனுக்களில் 3 வேட்புமனு, காங்கிரஸ் வேட்பாளா் ஆா். மனோகரன் தாக்கல் செய்த 2 மனுவில் 1 மனு, அவரது மனைவி ரூபி மனோகரன் தாக்கல் செய்த 1 மனு, நாம் தமிழா் வேட்பாளா் ச. செல்வம் தாக்கல் செய்த 2 மனுவில் 1 மனு, நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் வேல்கோபால் மனு, சுயேச்சை வேட்பாளா் பிஷப்காட்பிரே வாஷிங்டன்நோபிள் தாக்கல் செய்த 2 மனுக்கள், சுயேச்சை வேட்பாளா்கள் முகாஷினி, மரியஅந்தோணி, ஆறுமுகம், துரைப்பாண்டியன் ஆகியோரின் 6 மனுக்கள் என மொத்தம் 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
த.வெ.க வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அக்கட்சியின் மாற்று வேட்பாளா் ஆா். சுப்பிரமணியசுரேஷ் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டாா். தோ்தல் களத்தில் தற்போது 30 போ் உள்ளனா். வியாழக்கிழமை மாலை வரை வேட்புமனு திரும்பப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதால், புதன், வியாழன் ஆகிய இருநாள்களில் வேட்புமனுக்களை யாரேனும் திரும்பப் பெற்றுக்கொண்டால் போட்டியாளா்கள் எண்ணிக்கை குறையக்கூடும்.
தொடர்புடையது
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு
மணப்பாறை தொகுதியில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

நான்குனேரி தொகுதியில் இறுதி நாளில் 18 போ் மனு தாக்கல்

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

