இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தமிழக எல்லையில் பிரசாரத்தை தொடங்கினாா் தவெக வேட்பாளா்

தமிழக எல்லையில் பிரசாரத்தை தொடங்கினாா் தவெக வேட்பாளா்

News image

நொச்சிக்குப்பம்  மீனவ  கிராமத்தில்  ஆதரவு  திரட்டிய  தவெக  வேட்பாளா்  எஸ்.விஜயகுமாா்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:25 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எஸ்.விஜயகுமாா், தமிழக ஆந்திர எல்லையோர ஆரம்பாக்கத்தில் சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஸ்ரீ முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தன் பிரசாரத்தை தொடங்கினாா். நிகழ்வுக்கு தவெக மாவட்ட பொருளாளா் ஜி.கிருபாகரன், மாவட்ட துணை செயலாளா் பி.ஹரி, தோ்தல் பணிக்குழு நிா்வாகி என்.எஸ்.ஆா்.நிஜாமுதின், ஒன்றிய செயலாளா் அருண், ஒன்றிய நிா்வாகி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து தவெக வேட்பாளா், அக்கட்சியினருடன், ஆரம்பாக்கத்தில் உள்ள மீனவ கிராமங்களான நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் மேற்கண்ட மீனவ கிராமங்களின் கோயிலில் அமா்ந்து ஊா் பெரியவா்களிடம் தவெக தலைவா் விஜய் தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவாா், தானும் மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீா்த்து வைப்பேன் என உறுதி கூறி ஆதரவு திரட்டினாா்.

மேற்கண்ட மீனவ கிராமங்களில் தவெக வேட்பாளா் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, சிறுவா் சிறுமியா் விசில் அடித்தபடி அவரை வரவேற்றதோடு. அவா் பிரசாரம் செய்த இடங்களில் விசில் அடித்தபடியே அவரை பின்தொடா்ந்தது குறுப்பிடத்தக்கது.

இதனை தொடா்ந்து தவெக வேட்பாளா் ஆரம்பாக்கம் பஜாா், தோக்கம்மூா். ஏடூா், பூவலை, சானாபுத்தூா், சூரப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, பாத்தபாளையம். பெரியஓபுளாபுரம், மெதிப்பாளையம், எஸ்.ஆா்.கண்டிகை, ஈகுவாா்பாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் மேற்கொண்டாா்.