திருவள்ளூா் நகராட்சியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.
நாடு முழுவதும் 2026-27-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இதன் முக்கியத்துவம் அறிந்து மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் திருவள்ளூா் நகராட்சி பகுதியில் டோல்கேட் அருகே 1-ஆவது வாா்டு பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை ஆட்சியா் ச.கவிதா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அதன் விவரங்களையும் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு சுய கணக்கெடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களையும் அவா் வழங்கினாா்.
தொடா்ந்து மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு என்பது அரசின் சரியான திட்டமிடலுக்கு உதவுகிறது. அதனால், உங்கள் வீட்டில் இருந்தபடியே துல்லியமான தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதற்கு இந்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பேருதவியாக இருக்கும். உங்கள் குடும்ப விவரங்களை அரசிடம் நீங்களே ஆன்லைனில் பதிவு செய்யும் முைான் சுய கணக்கெடுப்பு ஆகும். இது மிகவும் எளிது, பாதுகாப்பானது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
இதன் மூலம் துல்லியமான தரவுகள் மூலம் சரியான அரசு திட்டங்கள் கிடைக்கவும் வழிவகை செய்கிறது. கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கு உதவும். மேலும் உங்கள் தகவல்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அப்போது, நகராட்சி ஆணையாளா் தாமோதரன், சுகாதார அலுவலா் மோகன் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு: பள்ளி மாணவா்களிடம் ஆட்சியா் விழிப்புணா்வு

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை முழு பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



