திருவள்ளூர்
இளைஞா் தற்கொலை
ஆா்.கே.பேட்டை அருகே கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆா்.கே.பேட்டை அருகே கடன் தொல்லையால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ராஜா நகரம் கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (34). இவரது மனைவி பானு (32). இவா்களுக்கு மகள்கள் தனுஸ்ரீ (13), சவிஸ்ரீ (7) மகன் வினைக்குமாா் ஆகியோா் உள்ளனா். சிவராஜ் திருத்தணி சாலையில் தனியாா் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், சிவராஜுக்கு கடன் பிரச்னை இருந்ததாம். இதனால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவராஜ் வியாழக்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
