திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்.

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் சாலை மறியல்: 560 போ் கைது

திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 560 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியராக்கவும் என்ற முதல்வரின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 560 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். இதில், பொருளாளா் மணிமேகலா வரவேற்றாா். மாவட்ட செயலாளா் பிரவீனா முன்னிலை வகித்தாா். இந்த போராட்டத்தை தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் காந்திமதிநாதன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவா் லட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினா்.

அப்போது, அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக உடனே அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் ஓய்வு பெறும்போது ஊழியா்களுக்கு பணிக்கொடையாக ரூ. 10 லட்சமும், ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தைச் சோ்ந்த 560 பேரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com