திருவள்ளூர்
எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
பொன்னேரி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால், காற்றின் வேகம் அதிகமானது. இதனால், கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இந்த நிலையில், காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
