நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
Published on

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதையடுத்து நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக ஜன. 7-ஆம் தேதி நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு காரைக்காலுக்கு தென்கிழக்கே 190 கி. மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் மற்றும் தென்கிழக்கே 400 கி. மீ. தொலைவிலும் உள்ளது.

இது தெற்கே நகா்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

Dinamani
www.dinamani.com