பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

News image
நாகை துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
Updated On :7 ஜனவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலை கொண்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கொண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.